பொன்பரப்பி கலவரம்! - தமிழ் சமூகத்தின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஆவணப்படுத்துவோம்
ஆம் நண்பர்களே, நமது பெருமைகளை மட்டுமல்ல, தலைக்குனிவுகளையும் ஆவணப்படுத்த வேண்டியது இன்றியமையாதது. அப்பொழுதுதான் நம் சமூகத்தின் குறைகள் என்ன, பிழைகள் என்ன என்பவற்றையெல்லாம் வருங்காலத்தினரும் உணர்ந்து மீண்டும் அப்படிப்பட்ட சூழல்கள் வரும்பொழுது அதே தவறுகளை மறுபடியும் செய்து விடாதபடி தற்காத்துக் கொள்ள முடியும்.
அரியலூர் மாவட்டத்தின் பொன்பரப்பி கிராமத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நாளான கடந்த மே 18 (18.04.2019) அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. கலவரப் பகுதிகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களையும் காணொலிகளையும் சமூக ஊடகங்களில் பார்க்கும்பொழுது நெஞ்சைப் பிசைகிறது. முதியவர்கள், குழந்தைகள் என ஈகை இரக்கம் ஏதுமின்றி அடித்துத் தாக்கியிருக்கிறார்கள். குழந்தையும் குட்டியுமாக வாழும் வீடுகளை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். உதிரம் சொட்டச் சொட்டப் பலரையும் மண்டையை உடைத்திருக்கிறார்கள்.
ஆனால் தெருவில் போகிறவன் கூட பேசுபுக்கு மூலம் நேரலை ஒளிபரப்புச் செய்ய முடிகிற இந்தக் காலத்தில், ஐம்பத்தெட்டு செயற்கைக்கோள்களும் உலகெங்கும் ஒளிபரப்பு உரிமங்களும் வாங்கி வைத்திருக்கிற தொலைக்காட்சிகளோ இவை எதையுமே காட்டாமல் இருட்டடிப்புச் செய்கின்றன. "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் சின்னமான பானை உடைக்கப்பட்டதால் இரு பிரிவினரிடையே மோதல்" என வெகு நாசுக்காக உண்மையைக் கடந்து போகின்றன. இப்படி நுனிப்புல் செய்தி சொல்ல இவர்களுக்கு எதற்காக இத்தனை உலகத்தரமான தொழில்நுட்ப வசதிகள்?!
ஊடகங்கள்தாம் இப்படியென்றால் அரசியல் தலைவர்கள் விடுக்கும் அறிக்கை நாடகங்கள் அதற்கு மேல் அருவெறுப்பை வரவழைக்கின்றன. பார்த்த வரையில், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர் திரு.கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தவிர வேறு யாரும் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை நேரடியாகக் கண்டிக்கவே இல்லை. கலவரத்தை நடத்தியது பா.ம.க-தான் என ஊர் உலகத்துக்கே தெரியும். ஆனால் வருங்கால முதல்வர் கனவில் மிதக்கும் ஸ்டாலின், சீமான், கமல், ரஜினி என யாருமே பா.ம.க., எனும் சொல்லைக் கூடத் தங்கள் அறிக்கையில் மறந்தும் குறிப்பிடவில்லை.
கண்ணெதிரே மக்கள் கொடுமைப்படுத்தப்படும்பொழுது அதை நிகழ்த்துபவர்களைப் பார்த்து "நிறுத்து!" என நேரடியாகச் சொல்லக் கூட முதுகெலும்பில்லாத இந்தத் தலைவர்கள்தாம் நாளை ஆட்சிக்கு வந்து நம்மைத் தலைநிமிர வைத்து விடுவார்கள் என நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்! நிகழ்காலத்தில் நடக்கும் தாக்குதலையே கண்டிக்க வகையற்ற இவர்கள்தாம் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த தமிழினப் படுகொலைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துத் தனி ஈழம் பெற்றுத் தந்து விடுவார்கள் என நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம்!
இப்படி அரசியல், ஊடகங்கள் என எல்லாமே அவரவர் தன்னலத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு போகும் சூழலில் இன்று மக்களுக்காக எஞ்சியிருப்பது மக்கள் ஊடகமான இணையம்தான். மாபெரும் பண வலிமையும் சட்டப் பின்புலமும் கொண்ட ஊடகங்களும் ஆள் வலிமை மிக்க தலைவர்களும் பொன்பரப்பி தாக்குதல் பற்றிக் கேட்காத கேள்விகளை சமூக ஊடகங்களில் எளிய மனிதர்கள் போகிற போக்கில் கேட்கிறார்கள். உணர்வும் உரைப்பும் மிக்க அந்தக் கேள்விகளும் கண்டனங்களும் இணைய ஓட்டத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடாமல் நிலையாக ஆவணப்படுத்தும் சிறு முயற்சியே இது.
இந்தக் குழந்தை உங்களுக்கு எந்த வகையில் எதிரியானது @draramadoss சார்??#பொன்பரப்பி #Ponparappi pic.twitter.com/O245auvRWg— Pa_Prem (@PaPrem3) April 19, 2019
உங்கள் குடும்பம் வாழ, உங்கள் சாதியைச் சேர்ந்த அடுத்த தலைமுறையையும் சிதைக்கிறீர்களே?? இது எந்த வகையில் நியாயம் @draramadoss சார்??— Pa_Prem (@PaPrem3) 19 ஏப்ரல், 2019
எப்போது திருந்தப் போகிறீர்கள் உங்கள் சுயலாப அரசியலுக்கு, அப்பாவிகளை பலியிடும் கொடுஞ்செயலை விட்டு??#Ponparappi #பொன்பரப்பி pic.twitter.com/RxxqXvh7Gs
— விக்கி_டாக்ஸ் CSK 🔥 (@vickytalkz) 19 ஏப்ரல், 2019
#பொன்பரப்பிமதம் மனிதனை மிருகமாக்கும்!— jagan raj (@jaga0790) 19 ஏப்ரல், 2019
சாதி மனிதனை சாக்கடையாக்கும்! #பொன்பரப்பி #கலவரம் pic.twitter.com/AAp5WdA53G
நாயும் கழுதையும் நடக்கிற தெருவுல... நாங்க நடந்த தப்பாடா!— G Jagannath (@Jagan_G1983) 19 ஏப்ரல், 2019
....நாங்க போடுற VOTE -ல தீட்டு இல்லையா ? நாங்க பதவிக்கு வந்த தப்பாடா...
Credit: @ComradeTalkies https://t.co/gTJTTMCaKj#dalits pic.twitter.com/4ITMZOvboM
ஹிந்துகளே கூடுங்கள், ஹிந்துகளை காப்பாற்ற ஒன்று கூடுங்கள் என கூப்பிட்டே கும்பலே,இதோ உன் ஹிந்து சொந்தத்தை அடித்து வக்கத்து நிற்க வைத்திருக்கிறது ஒரு #ஜாதிவெறி கும்பல்— niranjan kumar (@niranjan2428) 18 ஏப்ரல், 2019
இதுக்கு வாய் தொறக்காத எவருக்கும் இனி ஹிந்துவை ஒன்று கூடுங்கள் என சொல்ல அருகதை கிடையாது#அரியலூர்#பொன்பரப்பி pic.twitter.com/vDakCSfCAO
மதவாதம், சாதியவாதத்தை எதிர்போம் என்று வாக்கு கேட்ட அனைத்து தலைவர்களும் நாளை பொன்பரபி செல்லுங்கள். பயந்தோர்க்கு நம்பிக்கையினையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் குரல் கொடுங்கள். #LokSabhaElections2019 #பொன்பரப்பி #சாதிவெறி pic.twitter.com/3zRHg8Q1UH— Satheesh lakshmanan 🖋சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) 18 ஏப்ரல், 2019
சாதிவெறி ஏற்றி ஏழை மக்களை சிறைக்கு அனுப்புவதை தாண்டி சாதியும், சாதிவெறி சங்கங்களும் என்ன செய்து கிழித்தது? #பொன்பரப்பி #LokSabhaElections2019 # pic.twitter.com/2I0N5NSxlN— Thesa Bhakthal Meme (@tbhakthal) 20 ஏப்ரல், 2019

இது பற்றி உங்கள் கருத்து?...