தங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நமது களம் கூறும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்!
21-ஆவது பொதுநலவாய (commonwealth) விளையாட்டுப் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த 4-ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவருக்கான பளு தூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழ்நாட்டு வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர்.
சதீஷ்குமாரின் வெற்றி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை மகிழ்ச்சியுறச் செய்திருக்கிறது. சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த முறை ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பொதுநலவாயப் போட்டியிலும் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வென்ற தங்கத் தமிழன் சதீஷ் குமார் சிவலிங்கத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கும் வேளையில் நமது களம் இதழும் அவரைப் பாராட்டிப் பெருமிதம் கொள்கிறது!
✿ ❀ ❋ தங்கத்தமிழனுக்கு நமது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்! ✿ ❀ ❋

இது பற்றி உங்கள் கருத்து?...